சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கான போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை தொடக்கம்!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது.
இதையும் படிக்க: சஞ்சு சாம்சனுக்கு காயம்; மீண்டும் அணியில் இடம்பெறுவாரா?
டிக்கெட் விற்பனை தொடக்கம்
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி விளையாடவுள்ள மூன்று குரூப் சுற்று போட்டிகள் மற்றும் துபையில் நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. டிக்கெட் ஒன்றின் குறைந்தபட்ச விலை ரூ.2900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ள 10 போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை கடந்த வாரமே தொடங்கிவிட்டது.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை, முதல் அரையிறுதிப் போட்டி நிறைவடைந்தவுடன் தொடங்கும் என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.