செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபி: வங்கதேச அணி அறிவிப்பு! ஷகிப், லிட்டன் தாஸ் அதிரடி நீக்கம்!

post image

சாம்பியன்ஸ் டிராபிக்கான வங்கதேச கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச மற்றும் உள்ளூர்ப் போட்டிகளில் பந்துவீச தடைவிதிக்கப்பட்டுள்ள வங்கதேச முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஷகிப்-அல்-ஹசன் மற்றும் முன்னணி ஆட்டக்காரர் லிட்டன் தாஸும் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

கடந்த மாதம் இங்கிலாந்தில் நடந்த பந்துவீச்சு சோதனையில் தோல்வியைத் தழுவிய ஷகிப்-அல்-ஹசன், சமீபத்தில் சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா விளையாட்டு அறிவியல் மையத்தில் நடந்த சோதனையிலும் தோல்வியைத் தழுவினார். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற 37 வயதான ஷகிப்-அல்-ஹசனின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபையில் பிப்ரவரி 20 ஆம் தேதி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் தங்களது முதல் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது வங்கதேச அணி.


ஒருவர் சதம், மூவர் அரைசதம் விளாசல்; அயர்லாந்துக்கு 371 ரன்கள் இலக்கு!

ஷகிப்-அல்-ஹசனைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ், கடந்த 13 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம்கூட அடிக்கவில்லை. அவர் கடைசியாக 2023 ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்திருந்தார்.

கடந்தாண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் காயமடைந்த நஜ்முல் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

வங்கதேச அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), தவ்ஹித் ஹ்ரிடோய், சௌமியா சர்க்கார், தன்சித் ஹசன், மஹ்முதுல்லா, ஜேக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், தஸ்கின் அஹ்மத், பர்வேஸ் ஹொசைன், நசும் அகமது, தன்சிம் ஹாசன், நஹித் ராணா.

பிசிசிஐ புதிய செயலாளர் யார்?

ஒருநாள் போட்டியில் 346* ரன்கள் குவித்து 14 வயது மாணவி சாதனை!

ஒருநாள் போட்டியில் 346* ரன்கள் குவித்து 14 வயது மாணவி சாதனை படைத்துள்ளார்.19 வயதுக்குள்பட்ட மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேகாலயாவுக்கு எதிரா... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த்தா? சஞ்சு சாம்சனா? ஹர்பஜன் சிங் பதில்!

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக யார் இடம்பெற வேண்டுமென்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கவுள்ள ந... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 12) அறிவித்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி க... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் ஐசிசி நடத்தை விதிமுறைகள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐசிசி நடத்தை விதிமுறைகள் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் தொடருக்கான மெகா ... மேலும் பார்க்க

பிசிசிஐ செயலர், பொருளாளர் போட்டியின்றித் தேர்வு!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர், பொருளாளர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.பிசிசிஐ செயலராக செயல்பட்டு வந்த ஜெய் ஷா, கடந்த ஆண்டின் இறுதியில் ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்றுக... மேலும் பார்க்க

100-வது ஒருநாள் போட்டியில் அசத்திய தீப்தி சர்மா!

இந்திய வீராங்கனை தீப்தி சர்மா அவரது 100-வது ஒருநாள் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்காட்டில் இன்று (ஜனவரி ... மேலும் பார்க்க