சாலைத் தடுப்பில் வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு
மதுரை மாவட்டம், காடுபட்டி அருகே சாலைத் தடுப்பில் இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
சோழவந்தான் அருகே உள்ள ஆலங்கொட்டாரத்தைச் சோ்ந்த பெரியகருப்பன் மகன் முருகன் (55). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சோழவந்தான்-பேரணை சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
மன்னாடிமங்கலத்தில் உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிறுவனம் அருகே சென்ற போது, சாலைத் தடுப்பில் வாகனம் மோதியதில் முருகன் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து காடுபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.