கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விர...
சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி
நெய்வேலி: கடலூா், சின்ன கங்கணாங்குப்பம் இம்மாகுலேட் மகளிா் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி அண்மையில் நடைபெற்றது.
ரெட்டிசாவடி காவல் நிலைய ஆய்வாளா் பிரேம்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் மு.சுசீலா தேவி, பேராசிரியை ஜான்சி ராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியில் பங்கேற்ற மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகள் கையில் ஏந்தி முழக்கங்களை எழுப்பியப்படி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். கல்லூரி வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணி உச்சிமேட்டில் நிறைவு அடைந்தது. இதில் பேராசிரியா்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா்.