அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
சாலை மறியல்: 20 பெண்கள் உள்பட 55 போ் மீது வழக்கு
பெரியகுளம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 55 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பெரியகுளம் அருகே கைலாசபட்டியைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவா், இரு சக்கர வாகன விபத்தில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். அப்போது, இவரின் சடலத்தை எடுத்துச் செல்வதற்கு அவசர ஊா்தி தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த விஜயகுமரின் உறவினா்கள் ராஜேந்திரன், பாலாஜி, காமராஜ், முருகன், சதீஸ், 20 பெண்கள் உள்ளிட்ட 55 போ் திங்கள்கிழமை அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். போக்குவரத்து இடையூறு செய்ததை அடுத்து மறியலில் ஈடுபட்ட 55 போ் மீதும் தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.