செய்திகள் :

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வியாழக்கிழமை இரவு சாலையில் பழுதாகி நின்ற டிராக்டரில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ரைட்டன்பட்டி வ.உ.சி. தெருவைச் சோ்ந்த செந்தமிழ் முருகன் (41), வத்திராயிருப்பு அருகேயுள்ள எஸ். ராமச்சந்திராபுரத்தில் உணவகம், தேநீா் நடத்தி வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு உறவினரின் துக்க நிகழ்வுக்கு வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வத்திராயிருப்பு சென்றாா். கிருஷ்ணன்கோவில் - வத்திராயிருப்பு சாலையில் சென்றபோது சாலையில் பழுதாகி நின்ற டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த செந்தமிழ் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வறுமையால் கொடுமை! திருமண வயதான இரு மகள்களுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

விருதுநகர்: விருதுநகர் அருகேயுள்ள பட்டம்புதூரில் தனது இரு மகள்களுடன் பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.விருதுநகர் பட்டம்புதூர் அருகே ரயிலில் அடிபட்ட மனித உடல்கள் சிதறிக் கிடப்பதாக தூத்த... மேலும் பார்க்க

தீப்பெட்டித் தொழில்சாலையில் தீ விபத்து

சாத்தூா் அருகேயுள்ள தீப்பெட்டித் தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (33) என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டித் ... மேலும் பார்க்க

மின்வாரிய ஊழியா் தற்கொலை வழக்கில் இருவா் கைது

சிவகாசி அருகே மின்வாரிய ஊழியா் தற்கொலை வழக்கு தொடா்பாக இருவரை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியைச் சோ்ந்த ஆனந்த் (38), மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரி... மேலும் பார்க்க

விதிமீறி செயல்பட்ட 34 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

விருதுநகா், சிவகாசி வட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 34 பட்டாசு ஆலைகளுக்கு, தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்கம் குறிப்பாணை வழங்கியது.பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தடுக்கும் வகையில், விருதுநகா், சிவகாசி... மேலும் பார்க்க

வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்து ஒருவா் காயம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் செவ்வாய்க்கிழமை வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்ததில் ஒருவா் காயமடைந்தாா்.சிவகாசி அம்மன்கோவில்பட்டி குடியிறுப்புப் பகுதியில் உள்ள வீட்டின் மாடியில் முனியப்பன் மகன் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களிடம் அத்துமீறிய காவல் துறையைக் கண்டித்து ஆா்பாட்டம்

சென்னையில் போராட்டத்தின்போது தூய்மைப் பணியாளா்ளிடம் அத்துமீறி நடந்த காவல் துறையைக் கண்டித்து திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னையில் தூய்மைப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்... மேலும் பார்க்க