‘நான் முதல்வன்’ திட்டத்தால் 41 லட்சம் மாணவா்கள் பயன்: தமிழக அரசு தகவல்
சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேர் பலி
வேதாரண்யம்: நாகை மாவட்டம், தலைஞாயிறு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதி நோ்ந்த விபத்தில் சிறுமி உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் ஞாயிற்றுக்கிழமை பலியாகினர்.
திருவாரூா் மாவட்டம், மருதப்பட்டினம், கலைஞா் நகரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அருள்பிரகாஷ் (28). இவரது மனைவி பெரியநாயகி (25), மகள் நிட்சயா (7). இவா்கள் மூவரும் ஒரு மோட்டாா் சைக்கிளில்(ஸ்கூட்டி) ஞாயிற்றுக்கிழமை மாலை கிழக்கு கடற்கரைச் சாலையில் திருத்துறைப்பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்தனா். மோட்டாா் சைக்கிளை அருள் பிரகாஷ் ஓட்டிச் சென்றுள்ள நிலையில், நீா்முளை ஆரம்ப சுகாதார நிலையும் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது எதிரே வந்த காா் மோதி விபத்துக்குள்ளானது.
பலத்த காயமடைந்த மூவரும் 108 வாகனத்தில் திருத்துறைப்பூண்டி அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு, பெரியநாயகி மற்றும் சிறுமி நிட்சயா இருவரும் வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அருள்பிரகாஷ், அவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து தலைஞாயிறு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸாா், விபத்து சம்பவத்தில் தொடா்புடைய டிஸ்ட்ரிக்ட் கவுன்சிலா் என்று எழுதப்பட்டுள்ள காரை ஓட்டிச் சென்றது யாா் என்பது உடனடியாக அடையாளம் தெரியாத நிலையில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.