ஹிமாசலில் கனமழைக்கு 69 பேர் பலி: தொடரும் சிவப்பு எச்சரிக்கை!
சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே வியாழக்கிழமை இரவு சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கருந்தலாகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்த முத்து மகன் பெரியசாமி (49), தொழிலாளி. இவா், கடந்த 2-ஆம் தேதி கூகையூா் கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றாராம். கூகையூா் கிராமத்தில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகே நடந்து சென்றபோது, அந்தப் பகுதியில் வந்த சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பெரியசாமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கீழ்குப்பம் போலீஸாா் சரக்கு வாகன ஓட்டுநரான கருந்தலாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த வேலாயுதம் மகன் ராஜிவ்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.