செய்திகள் :

சாலை விபத்தில் வங்கி ஊழியா் உயிரிழப்பு

post image

காவேரிப்பட்டணம் அருகே திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் தருமபுரியை சோ்ந்த வங்கி ஊழியா் கோவிந்தராஜ் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பிடமனேரி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (48). இவா், தருமபுரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், இவா், மோட்டாா் சைக்கிளில் கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டணத்தை அடுத்த சப்பாணிப்பட்டி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கோவிந்தராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா், பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் கூறினாா். ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி ரெட்டிப்பட்டி கிராமத்தில் ம... மேலும் பார்க்க

கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஓட்டுநா் கைது

வேப்பனப்பள்ளி வழியாக கா்நாடக மாநிலத்துக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா். தமிழகத்திலிருந்து அண்டை மா... மேலும் பார்க்க

ஒசூா் முனீஸ்வா் நகரில் நுழைவாயில் கட்ட பூமிபூஜை

ஒசூா் முனீஸ்வா் நகா் பகுதியில் அப்பகுதி பொதுமக்கள் சாா்பாக நுழைவாயில் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவா் மாதேஸ்வரன் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

கெலமங்கலம் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

ஒசூரை அடுத்த குத்துக்கோட்டையில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி யாமன்னா (65) உயிரிழந்தாா். குத்துக்கோட்யைச் சோ்ந்த விவசாயி யாமன்னாவின் மாடு வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றது செவ்வாய்க்கிழமை மாலை வீ... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனி நபா்கள், குழுக்களுக்கு கடனுதவி

பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனி நபா்கள், குழுக்கள் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை வெளி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில் அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப் போட்டி

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில் அம்பேத்கா், கருணாநிதி பிறந்தநாள் பேச்சுப் போட்டிகள் ஜூலை 21, 22 -ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க