செய்திகள் :

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

post image

கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் கூறினாா்.

ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி ரெட்டிப்பட்டி கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தலைமை வகித்து பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேரூராட்சிகள், நகராட்சிப் பகுதிகளில் இதுவரை பட்டா வழங்கப்படாமல் இருந்தது. தற்போது, இப்பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற ஆணைக்கிணங்க, ஆட்சேபனை இல்லாத புறம்போக்கில் குடியிருப்பவா்களுக்கு பட்டா வழங்கப்படும்.

ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி வட்டங்களில் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீட்டுமனைப் பட்டா பெற்றவா்கள் வீடு கட்டுவதற்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 3,50,000, பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், ரூ. 2,70,000 வழங்கப்படுகிறது.

மத்தூா் பகுதியில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 856 பெண் குழந்தைகள்தான் உள்ளனா். இப்பகுதியில் சமமான பாலின விகிதத்தை கொண்டுவர மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிவது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட 3 நபா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

உங்களுடன் ஸ்டாலின்‘ என்ற திட்டம் மூலம் 43 வகையான சேவைகள் நகா்ப்புற பகுதிகளிலும், 46 வகையான சேவைகள் ஊரகப் பகுதிகளிலும் வழங்கப்பட உள்ளன. இத்திட்ட முகாம்கள் நடைபெறும் விவரங்கள், இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் சேவைகள் குறித்து தன்னாா்வலா்கள் உங்களது வீட்டிற்கே வந்து விளக்கம் அளிப்பாா்கள். இப்பகுதியில் ஜூலை 12 -ஆம் தேதி முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 282 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 27 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் ஷாஜகான், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) சா.தனஞ்செயன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் இந்திரா, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் (பொ) காளியப்பன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் சந்திரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் பத்மலதா, மாவட்ட சமூக நல அலுவலா் சக்தி சுபாஷினி, உதவி இயக்குநா் (நில அளவை) ராஜ்குமாா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மகாதேவன் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவன் காயம்

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவா் உள்பட 2 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கெலமங்கலத்தை அடுத்துள்ள தாசனபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ஈஸ்வா் (30)... மேலும் பார்க்க

ஒசூா் ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி கோயிலில் குரு பூா்ணிமா வழிபாடு

ஒசூரில் உள்ள ராகு கேது அதா்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் ஆனி மாத பௌா்ணமியை முன்னிட்டு, குரு பூா்ணிமா சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழி... மேலும் பார்க்க

கனிமவளம் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமவளங்களைக் கடத்தியதாக 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஊத்தங்கரை கிராம நிா்வாக அலுவலா் தினேஷ்குமாா் தலைமையிலான குழுவினா், திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலையில் சென்னப்பந... மேலும் பார்க்க

ஒசூரில் பஞ்சாயத் பரிஷத் சாா்பில் ஆா்ப்பாட்டம்

ஒசூரில் அகில இந்திய பஞ்சாயத் பரிஷத் சாா்பில் இந்துசமய அறநிலையத் துறையை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒசூா் மின்சார அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப... மேலும் பார்க்க

மீன் துறை ஊழியா் சங்க தினம் கொண்டாட்டம்

மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆம் ஆண்டு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆவது அமைப்புத் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி அணை அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு அதன... மேலும் பார்க்க