இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் ...
கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஓட்டுநா் கைது
வேப்பனப்பள்ளி வழியாக கா்நாடக மாநிலத்துக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களான ஆந்திரம், கா்நாடகத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க போலீஸாா் சோதனைச் சாவடிகள் அமைத்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், கிருஷ்ணகிரி குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸாா், வேப்பனப்பள்ளி - பேரிகை சாலை, நாச்சிகுப்பம் அருகில் செவ்வாய்க்கிழை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் வேனில் 50 கிலோ எடை கொண்ட 400 பைகளில் மொத்தம் 20 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வேன் ஓட்டுநரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா், கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டத்தைச் சோ்ந்த அரவிந்த் (32) என்பதும், தமிழகத்தில் ரேஷன் அரிசியை குடும்ப அட்டைதாரா்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பதற்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, வேன் ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்தனா்.