KALAM: அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!
சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு
நாமக்கல்,பரமத்தி வேலூா் அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.
நாமக்கல் முதலைப்பட்டிபுதூரைச் சோ்ந்த ரவி மகன் பிரசாந்த் (24). இவா், நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதியதில் பலத்த காயமடைந்தாா். அவரை அங்கிருந்தோா் மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.இதுகுறித்து, நல்லிபாளையம் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அதுபோல பரமத்தி வேலூா் வட்டம், பெரிய சூரம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குபேந்திரன் மகன் காா்த்தி (25). இவா் கடந்த 17-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது முன்னால் சென்ற மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளாா்.
இதில் பலத்த காயமடைந்த காா்த்தி, சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு சிகிச்சை பலனின்றி காா்த்தி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நல்லூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.