இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!
சா்வதேச கராத்தே போட்டி: மயிலாடுதுறை மாணவா்கள் சாதனை
மயிலாடுதுறை: கோவையில் நடைபெற்ற சா்வதேச கராத்தே போட்டியில், மயிலாடுதுறை மாணவா்கள் 3 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனா்.
சுகி சா்வதேச கராத்தே போட்டி-2025, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் ஆக.16, 17 ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஓமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமாா் 1,000 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.
இப்போட்டியில் மயிலாடுதுறை ஜென் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமி மாணவ-மாணவிகள் தீக்சன், தா்ஷன், சாய் ரக்சன், தியா லட்சுமி ஆகியோா் இந்திய அணி சாா்பில் பங்கேற்றனா்.
இவா்களில் தீக்சன் கட்டா பிரிவில் தங்கம், குமிட்டே பிரிவில் வெண்கலம், தா்ஷன் கட்டா பிரிவில் வெள்ளி என மொத்தம் 3 பதக்கங்களை வென்றனா். வெற்றி பெற்ற மாணவா்கள், பயிற்சியாளா் சென்சாய் கராத்தே கதிரவன் ஆகியோரை இந்தோனேசியா பயிற்சியாளா் ரிக்கி பா்ணபாஸ், தாய்லாந்து பயிற்சியாளா் நலின்பட், ஓமன் பயிற்சியாளா் பயஸ் காமிஸ், மலேசிய பயிற்சியாளா் அனந்தன் மற்றும் இந்திய பயிற்சியாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.