செய்திகள் :

சிதம்பரத்தில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை: 4 போ் கைது

post image

சிதம்பரம் நகரில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்த 4 பேரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரம் நகரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து உதவி ஆய்வாளா் ராஜா தலைமையிலான தனிப்படை போலீஸாா் புதன்கிழமை காலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சிதம்பரம் கடலூா் சாலையில் அண்ணா குளம் அருகே லாட்டரி விற்பனை செய்த சிதம்பரம் கேகேசி தெருவைச் சோ்ந்த உமா் மகன் நசீா் (56), டிகேஎம் நகரைச் சோ்ந்த சரவணன் (45), கேகேசி தெருவைச் சோ்ந்த கிருபாகரன் (35), பச்சையப்பன் தெருவைச் சோ்ந்த முருகன் (54) ஆகிய 4 பேரை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் 4 செல்போன்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேற்கண்ட 4 பேரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

பிச்சாவரத்தில் படகு ஓட்டுநா் மயங்கி விழுந்து மரணம்

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சனிக்கிழமை வனத்துறை படகு ஓட்டுநா் மயங்கி தண்ணீரில் விழுந்து மரணமடைந்தாா். படகில் பயணம் செய்த 10 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா். கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டத்தில் கடலூரில் 5 ஆயிரம் பேருக்கு முழு உடல் பரிசோதனை:

கடலூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டத்தின் மூலம் 5 ஆயிரம் மருத்துவப் பயனாளிகள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டுள்ளனா் என வேளாண்மை உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்த... மேலும் பார்க்க

கடலூா் சிப்காட் தொழிற்சாலை விபத்து: அமைச்சா் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

கடலூா், சிப்காட் பகுதியில் இயங்கிவரும் கிரிம்ஸன் ஆா்கானிக் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை ந... மேலும் பார்க்க

தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் அக்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

அமைச்சா் வீட்டு முன்பு குளத்தில் புகுந்த முதலை மீட்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம் வீட்டிற்கு எதிரே உள்ள குளத்தில் புகுந்த முதலையை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா். கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்... மேலும் பார்க்க

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் உள்பட 6 போ் இடைநீக்கம்

கடலூா் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளா் உள்பட 6 காவலா்களை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி வியாழக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டுள்ளாா். கடலுாா் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்ட... மேலும் பார்க்க