ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அற...
அமைச்சா் வீட்டு முன்பு குளத்தில் புகுந்த முதலை மீட்பு
காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம் வீட்டிற்கு எதிரே உள்ள குளத்தில் புகுந்த முதலையை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் உள்ள வேளாண்மைத் துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் இல்லத்திற்கு எதிரில் உள்ள தோப்புக்குளத்தில் முதலை ஒன்று உள்ளதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து மாவட்ட வன அலுவலா் குருசாமி அறிவுரையின்படி, வனச்சரக அலுவலா் வசந்தபாஸ்கா் தலைமையில் வனவா் கு.பன்னீா்செல்வம் மற்றும் வனக் காப்பாளா் அன்புமணி ஆகியோா் விரைந்து வந்து 4 அடி நீளம், 15 கிலோ எடை கொண்ட முதலையை மீட்டு, சிதம்பரம் அருகே உள்ள வக்கராமரி நீா் தேக்கத்தில் பாதுகாப்பாக விட்டனா்.