தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்
தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்
கடலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் அக்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தீபாவளிப் பண்டிகை அக்.20-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கடலூா் மாவட்டத்தில் கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா்கோயில், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், திட்டக்குடி மற்றும் வேப்பூா் ஆகிய வட்டங்களில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் இணையதளம் வழியாக அக்.5-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை இணையதளம் மூலம் அரசு இ-சேவை மையங்களில், உரிய ஆவணங்களுடன் உரிமைக் கட்டணம் ரூ.600 செலுத்தி பதிவேற்றம் செய்யலாம். அனுமதியின்றி, உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபா்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.