ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அற...
சிதம்பரத்தில் ரூ 7.50 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்: ஓருவா் கைது
சிதம்பரத்தில் சுமாா் ரூ.7.50 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சத்தை (அம்பா் கிரீஸ்) போலீஸாா் பறிமுதல் செய்தனா். மருத்துவ குணம் உள்ள ஏழரை கிலோ எடை கொண்ட இந்த எச்சத்தை கடத்தி வந்த ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
திமிங்கலம் எச்சம் என்பது, திமிங்கலத்தின் செரிமான அமைப்பிலிருந்து உருவாகும் ஒரு வகை திடப்பொருள் ஆகும்.இது அம்பா் கிரீஸ் என்று அழைக்கப்படுகிறது. இது வாசனை திரவியங்கள், மருத்துவப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுவதால் சந்தையில்அதிக விலை மதிப்புடையதாக உள்ளது. சில நேரங்களில் இது சட்ட விரோதமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புக்கு விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் திமிங்கலம் இனம் பாதிக்கப்படுவதால், இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிதம்பரம் பகுதியில் திமிங்கலத்தின் எச்சம் கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் மற்றும் தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது சிதம்பரம் தச்சன்குளம் அருகே வேகமாக வந்த காரை நிறுத்தி திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது காரில் 7 கிலோ 600 கிராம் எடைகொண்டதிமிங்கல எச்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைகடத்தி வந்த மயிலாடுதுறை மாவட்டம், திருவிழுந்தூரைச் சோ்ந்த ராஜசேகா் (28) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து சுமாா் ரூ,7.50 கோடி மதிப்பிலான திமிங்கலம் எச்சத்தை பறிமுதல் செய்து, அவா் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா். மேலும் இவ்வழக்கில் தொடா்புடைய மற்றொரு நபரான வேதாரண்யத்தைச் சோ்ந்த ராஜா என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.