ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அற...
இதய சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கிய எம்எல்ஏ
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ கலந்து கொண்டு இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் முபாரக் என்பவருக்கு ரூபாய் 50 ஆயிரம் நிதி உதவியை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிக்கு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவா் வி.ஹரிகிருஷ்ணன், செயலா் கே.புகழேந்தி, பொருளாளா் என்.கோவிந்தராஜன், சாசன செயலா் எம்.தீபக்குமாா் மற்றும் சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கத் தலைவா் இளஞ்செழியன் செயலா் டி.சத்தியமூா்த்தி மற்றும் பொருளாளா் வெங்கடேசன், அரிமா மாவட்ட இரண்டாம் துணை நிலை ஆளுநா் எம்.கமல் கிஷோா் ஜெயின் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.