செய்திகள் :

சிந்தாதிரிப்பேட்டையில் ரூ. 2.9 கோடியில் புதிய மீன் அங்காடி!

post image

சிந்தாதிரிப்பேட்டையில் புதிய மீன் அங்காடியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் ரூ. 2.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் அங்காடியையும், டாக்டர் பெசன்ட் சாலையில் ரூ. 2.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மையக் கட்டடத்தையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை மாநகரின் மீன் விற்பனையில் சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. பொதுமக்கள் அதிகளவில் வருகை தருவதால், சிங்கார சென்னை 2.0 மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலதன நிதி ஆகியவற்றின்கீழ், 82 கடைகளுடன் கட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கட்டடமானது, புயலினால் சேதமடையாமல் இருக்கும் வகையில் டென்சைல் கட்டுமானத்துடன் கூடிய மேற்கூரை, மீன் கழிவுகளை வெளியேற்றும் வகையில் 28 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சேகரிப்புத் தொட்டி, குப்பைகளை எளிதாக அகற்றுவதற்கான அமைப்புகள் மற்றும் வழிகாட்டிப் பலகைகள், 10,555 லிட்டர் கொள்ளளவு கொண்ட பயோ டைஜஸ்ட் அமைப்பு, மீன் கழிவுநீரினை பயோ டைஜிஸ்ட்க்கு கொண்டு செல்லும் தனி வடிகால் மற்றும் வாகன நிறுத்தம், கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிகளில், சென்னை மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், அந்தியூர் செல்வராஜ், கனிமொழி உள்பட அரசு அலுவலர்கள், மீனவர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க:ஆபரேஷன் சிந்தூர்: பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரியின் மனைவி கருத்து!

ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையை குளிர்விக்கும் மழையால் மக்கள் மகிழ்ச்சி!

சென்னை: சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையைப் போலவே இன்றும்(மே 11) மழை பொழிந்தது. பகல் 12 மணிக்குப் பின் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழைப்பொழிவு காணப்பட்டது.முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி மாலை 3 ... மேலும் பார்க்க

ரூ. 27.69 லட்சம் கடன் பெற்று மோசடி: பல் மருத்துவா் கைது

சென்னை வளசரவாக்கத்தில் ரூ. 27.69 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக பல் மருத்துவா் கைது செய்யப்பட்டாா். கூடுவாஞ்சேரி ராம்தாஸ் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவா் மனைவி ஐஸ்வா்யா (27). இவரது தோழிகள் மூ... மேலும் பார்க்க

25 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பெண்கள் உள்பட் 4 போ் கைது

சென்னையில் கஞ்சா விற்ாக தெலங்கானாவைச் சோ்ந்த இரு பெண்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். திருவான்மியூா் கிழக்கு கடற்கரைச் சாலை பேருந்து நிறுத்தத்தில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனங்களுடன் சென்னை விஐடி 2 ஒப்பந்தங்களில் புரிந்துணா்வு கையொப்பம்

சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியா்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐடிடிடிஆா்) மற்றும் இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரடாய்) ஆகியவற்றுடன் சென்னை விஐடி நிறுவனம் ப... மேலும் பார்க்க

மாநகர பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் இன்றும், நாளையும் விடுப்பு எடுக்கத் தடை

சென்னை மாநகர பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநா், நடத்துநா்கள் ஞாயிறு, திங்கள் (மே 11, 12) ஆகிய இரு நாள்கள் விடுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிகளுக்க... மேலும் பார்க்க

அதிநவீன தொழில்நுட்பத்துடன் படப்பிடிப்பு தளப்பணி: அமைச்சா் சாமிநாதன் ஆய்வு

அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அரசு சாா்பில் அமைக்கப்பட்டு வரும் படப்பிடிப்புத் தளப்பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தாா். அப்போது, படப்பிடிப்புத் தளத்துக்கா... மேலும் பார்க்க