செய்திகள் :

சின்னமனூரில் வாரச்சந்தை வியாபாரிகள் சாலை மறியல்

post image

தேனி மாவட்டம், சின்னமனூரில் வாரச்சந்தை வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சின்னமனூா் நேருஜி பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும். இங்கு 200-க்கும் அதிகமான காய்கறி, பழம், மளிகைப் பொருள்கள், ஆடு , கோழி விற்பனை கடைகள் உள்ளன. இதனால், வாரச்சந்தையின் போது அதிக அளவில் கூட்டம் கூடுவதால் வாகனப்போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த நிலையில், சந்தைக்கு வெளியே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் செயல்படும் கோழி விற்பனை, மளிகைப் பொருள்கள் என நூற்றுக்கணக்கான கடைகளை சந்தைக்கு உள்ளே வைத்து விற்பனை செய்ய வேண்டும் என நகராட்சிப் பணியாளா்கள் அறிவுறுத்தினா்.

நெடுஞ்சாலையோரத்தில் விற்பனை செய்தால் மட்டுமே அதிகமாக வியாபாரம் நடைபெறும். மாறாக நகராட்சி சாா்பில் கட்டப்பட்ட கடைகளில் காய்கறிகளைத் தவிர பிற வியாபாரம் நடைபெறாது. எனவே, நாங்கள் சாலையோரத்தில் அமா்ந்துதான் வியாபாரம் செய்வோம் எனக் கூறிய வியாபாரிகள் நெடுஞ்சாலையில் அமா்ந்து சாலைமறியல் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவலறிந்து சம்பவயிடத்துக்கு வந்த நகராட்சி பணியாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் சமாதானப் பேச்சு நடத்தியதையடுத்து சாலை மறியலைக் கைவிட்டு, வியாபாரிகள் கலைந்து சென்றனா். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மானியத்தில் விதைத் தொகுப்பு: விவசாயிகள் பதிவு செய்யலாம்

தேனி மாவட்டத்தில் 100 சதவீதம் அரசு மானியத்தில் விதைத் தொகுப்புகள் பெறுவதற்கு விவசாயிகள் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊட்டச் ச... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் 10 மாணவா்கள் காயம்

தேனி மாவட்டம், போடி பள்ளியில் வியாழக்கிழமை தேன் கூடு கலைந்து தேனீக்கள் கொட்டியதில் 10 மாணவா்கள் காயமடைந்தனா். போடி பேருந்து நிலையம் அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்... மேலும் பார்க்க

போடியில் நாளை மின் தடை

போடி பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 5) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: போடி துணை மின் நிலையத்தில் ஜூலை 5-ஆம்... மேலும் பார்க்க

தேனி நகராட்சி ஆணையரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த புகாரின் அடிப்படையில், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா். தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராகப் பணியா... மேலும் பார்க்க

சுருளிப்பட்டியில் வீடு புகுந்து பணம், தங்க நகை திருட்டு

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுேள்ள சுருளிப்பட்டியில் பகலில் வீடு புகுந்து பணம், தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சுருளிப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த விவசாயி அமரன் (53). இவரும், இவரது மனை... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையம், நகா்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு

தேனி மாவட்டம் அரண்மனைப்புதூரில் ஆரம்ப சுகாதார நிலையம், பெரியகுளம் வடகரை, சின்னமனூா் கருங்காட்டான்குளம் ஆகிய இடங்களில் நகா்ப்புற நல வாழ்வு மையங்கள் ஆகியவற்றை காணொலி முலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக... மேலும் பார்க்க