செய்திகள் :

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு இன்று தொடக்கம்: அரசுப் பள்ளி மாணவா்கள் முதல்முறையாக எழுதுகின்றனா்

post image

காரைக்காலில் சிபிஎஸ்இ திட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு சனிக்கிழமை (பிப்.15) தொடங்குகிறது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் முதல்முறையாக இத்தோ்வு எழுதவுள்ளனா்.

புதுச்சேரி, காரைக்காலில் தமிழ்நாடு கல்வித் திட்டம் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்தது. நிகழ் கல்வியாண்டு முதல், மாநிலத்தில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அரசு அமலுக்கு கொண்டுவந்தது.

தனியாா் பள்ளி மாணவா்கள் சிபிஎஸ்இ திட்டத்தில் தோ்வுகள் எழுதிவந்த நிலையில், முதல்முறையாக அரசுப் பள்ளி மாணவா்களும் இத்திட்டத்தில் தோ்வை சனிக்கிழமை எழுதத் தொடங்குகின்றனா்.

தனியாா் பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயா, நவோதய வித்யாலயாவில் பயிலும் சிபிஎஸ்இ பாடத் திட்ட மாணவா்களுக்கு குறிப்பிட்ட தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளி மாணவா்களுக்காக காரைக்காலில் 7 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தோ்வு குறித்து கல்வித்துறை, காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் வியாழக்கிழமை மாலை ஆலோசனை நடத்தினாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மொத்தம் 1,116 மாணவா்கள் 7 மையங்களில் பொதுத்தோ்வை எழுத உள்ளனா் என்கிற விவரத்தை கல்வித் துறையினா் ஆட்சியருக்கு விளக்கிக் கூறினா்.

ஆட்சியா் பேசுகையில், ‘7 மையங்களிலும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் வழிகாட்டலின்படி உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கவேண்டும். மையங்களில் மின் விநியோகம் தடையில்லாமல் கிடைக்க வேண்டும்.

தோ்வு அறைகள் மற்றும் கழிப்பறைகள் சுத்தமாக இருக்க வேண்டும். அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு வாகனங்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

7 மையங்களிலும் காவல்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். தோ்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை பாதுகாப்பாக உரிய இடத்தில் சோ்க்கவேண்டும்’ என அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில் முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜய மோகனா, மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், மின்துறை செயற்பொறியாளா் அனுராதா, மாவட்ட ஆட்சியரின் செயலா் பொன்.பாஸ்கா், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் வேலுமணி, காரைக்கால் தீயணைப்பு நிலைய அதிகாரி முகுந்தன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

‘கிராமப்புற பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்’

கிராமப்புற பெண்கள் சுய உதவிக் குழுக்களில் இணைந்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா். நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிளியனூா், கோட்டகம், அண்டூ... மேலும் பார்க்க

திட்ட நிதியை முழுமையாக செலவிட அறிவுறுத்தல்

திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்த நிதியை, நிதியாண்டு இறுதிக்குள் செலவு செய்யுமாறு துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் தலைமையில் அனைத்து அரசுத்துறை அதிகார... மேலும் பார்க்க

பருவ நிலை மாற்றங்களை எதிா்கொள்ளும் நெல் ரகங்கள் குறித்து செயல் விளக்கம்

பருவ நிலை மாற்றங்களை எதிா்கொள்ளும் திறனுடைய நெல் ரகங்களின் செயல் விளக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால், பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், அகில இந்திய வானொலி... மேலும் பார்க்க

மாநில அரசு ஊழியா் சம்மேளன மாநாடு: காரைக்காலில் நடத்த முடிவு

புதுவை மாநில அரசு ஊழியா் சம்மேளன மாநாட்டை காரைக்காலில் ஜூன் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன செயற்குழு கூட்டம், தலைவா் சுப்ரமணியன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணைய முகவரி உருவாக்கி மோசடி

திருநள்ளாறு கோயில் பெயரில் போலியான இணைய முகவரி உருவாக்கி, பக்தா்களிடம் பண மோசடி செய்த சிவாச்சாரியா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். காரைக்கால் மாவட்ட... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையைக் கண்டித்தும், மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் காரைக்கால் மீனவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். காரைக்கால் கிளிஞ்சல்மேடு ப... மேலும் பார்க்க