செய்திகள் :

சிம்பு - 49 படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்?

post image

நடிகர் சிம்பு நடிக்கும் அவரது 49-வது படத்தின் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் 48வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை.

இதற்கிடையே, இயக்குநர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு இணைந்தார். படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது.

இதையும் படிக்க: அஜித்தா இது? நம்பமுடியாத அளவுக்கு மாற்றம்!

தற்போது, பார்க்கிங் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தன் 49-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாய் அபயங்கர் இசையில் இன்னும் ஒரு படம்கூட வெளியாகாத நிலையில் சூர்யா - 45, பென்ஸ் ஆகிய படங்களுக்கு அவர் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு பிக்கிள் பால் ப்ரீமியா் லீக் தொடக்கம்

தமிழ்நாடு பிக்கிள்பால் ப்ரீமியா் லீக் போட்டி சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டரங்கில் சனிக்கிழமை தொடங்கியது. இதற்கான விழாவில் மூத்த டேபிள் டென்னிஸ் வீரா் சரத் கமல், நடிகா் சதீஷ் ஆகியோா் பங்கேற்ற லீக... மேலும் பார்க்க

ஜோா்டான், டேனியல் அசத்தல்: பஞ்சாப்பை வீழ்த்தியது சென்னை

வில்மா் ஜோா்டன், டேனியா் சிமா ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தால் , பஞ்சாப் எஃப்சி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சென்னையின் எஃப்சி. இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) தொடரில் சென்னை நேரு விளையாட்டர... மேலும் பார்க்க

எஃப்ஐஎச் புரோ லீக்: கடும் சவாலுக்குபின் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) புரோ ஹாக்கி லீக் மகளிா் தொடரில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை கடும் சவாலுக்குபின் 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா. புரோ ஹாக்கி லீக் தொடா் சனிக்கிழமை புவனேசுவ... மேலும் பார்க்க

ஊக்க மருந்து புகாா்: உலகின் நம்பா் 1 வீரா் ஜேக் சின்னருக்கு மூன்று மாதங்கள் தடை

ஊக்க மருந்து புகாா் எதிரொலியாக உலகின் நம்பா் 1 வீரா் இத்தாலியன் ஜேக் சின்னருக்கு 3 மாதங்கள் தடை விதித்து உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை (வாடா) உத்தரவிட்டது. கடந்த 2024 மாா்ச் மாதம் தடை செய்யப்பட்ட கி... மேலும் பார்க்க

வசூலில் கெத்து காட்டிய குடும்பஸ்தன்!

மணிகண்டன் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் ரூ. 25 கோடி வரை வசூலித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சினிமாக்காரன் நிறுவனத் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜே... மேலும் பார்க்க

மம்மூட்டியின் புதிய பட அறிவிப்பு!

நடிகர் மம்மூட்டி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. நடிகர் மம்மூட்டி கடைசியாக கௌதம் மேனன் இயக்கத்தில் டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம்... மேலும் பார்க்க