3 சம்பவங்கள்: சொதப்பிய Delhi Police | Uttarakhand Cloudburst Seeman DMK | Imperf...
சிர்கா பெயிண்ட்ஸ் லாபம் 39 சதவிகிதம் உயர்வு!
புதுதில்லி: மர பூச்சு பொருட்கள் உற்பத்தியாளரான சிர்கா பெயிண்ட்ஸ் இந்தியா, முதல் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 39.2 சதவிகிதம் அதிகரித்து ரூ.14.20 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கு லாப வரம்பு மற்றும் விற்பனையில் ஏற்பட்ட வளர்ச்சியே காரணம் என்றது.
சிர்கா பெயிண்ட்ஸ் கடந்த வருடம் ரூ.10.21 கோடி நிகர லாபம் ஈட்டியதாக தெரிவித்துள்ளது. அதே வேளையில் அதன் செயல்பாடுகளிலிருந்து வந்த வருவாய் 45.26 சதவிகிதம் அதிகரித்து ரூ.114.24 ஆக உள்ளது என்றது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் அதன் வருவாய் ரூ.78.64 கோடியாக இருந்தது.
ஜூன் முடிய உள்ள காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவுகள் 44 சதவிகிதம் அதிகரித்து ரூ.95.26 கோடியாக உள்ளது.
வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடன்தொகை நீக்கத்திற்கு முந்தைய வருவாய் கடந்த ஆண்டு இதே காலத்தில் 17.89 சதவிகிதத்திலிருந்து 19.74 சதவிகிதமாக மேம்பட்ட நிலையில் நிறுவனத்தின் மொத்த வருமானம், இதர வருமானத்தையும் சேர்த்து, 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் 43 சதவிகிதம் அதிகரித்து ரூ.114.44 கோடியாக உயர்ந்துள்ளது.
2021 நிதியாண்டின் முதல் காலாண்டில், நிறுவனம் அதன் சுவர் பெயிண்ட் உற்பத்தி அலகை, முதலில் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக தேவைக்கு ஏற்ப பெரிய வளாகத்திற்கு மாற்றியுள்ளது.
வெம்ப்லி பெயிண்ட்களை கையகப்படுத்திய பிறகு, தற்போதுள்ள வசதிகளைத் தவிர, மேலும் மூன்று உற்பத்தி அலகுகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றது நிறுவனம்.
இதையும் படிக்க: தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்