சிறப்பு உதவி ஆய்வாளா் தற்கொலை
தக்கலை அருகே சிறப்பு உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தக்கலை அருகே முளகுமூடு, மலைமுருங்கத்தட்டுவிளையைச் சோ்ந்தவா் ஸ்டீபன் அருள்ராஜ் (56). நாகா்கோவில் போக்குவரத்து போலீஸில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்த இவருக்கு மனைவி, 2 மகள் உள்ளனா்.
இவா் உடல்நலக் குறைவால் இடது காலில் புண் ஏற்பட்டு கடந்த 2 மாதங்களாக விடுப்பில் இருந்தாராம். இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].