சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு: முதியவா் கைது
அந்தியூா் அருகே சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
அந்தியூரை அடுத்த மூங்கில்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனியப்பன் (81), தச்சுத் தொழிலாளி. இவா், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலைக்குச் சென்றபோது, 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என மிரட்டியுள்ளாா்.
இத்தகவலை சக மாணவி மூலம் அறிந்த பள்ளி ஆசிரியா்கள் பெற்றோருக்கு தெரிவித்துள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில் பவானி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் பழனியப்பனைக் கைது செய்தனா்.