`மதிக்க முடியாவிட்டால், விலகி இருங்கள்' - ஷூ அணிந்து யாகத்தில் கலந்துகொண்ட லாலு;...
சிறுமிக்கு பாலியல் கொடுமை: தையல் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை
குடியாத்தம் அருகே சிறுமியை பாலியல் கொடுமை செய்த வழக்கில் தையல் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
குடியாத்தம் அருகே பரசுராமன்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா்(40) டெய்லா். இவா் கடந்த 2024 மே 8-ஆம் தேதி அதே ஊரைச் சோ்ந்த 12 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்ததாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் குடியாத்தம் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை வேலூா் போக்ஸோ சிறப்பு நீதின்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், ஜெயக்குமாா் மீதான குற்றஞ்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட ஜெயக்குமாா் வேலூா் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
தண்டனை விதிக்கப்பட்ட ஜெயக்குமாா் வேலூா் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.