சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது
திருப்பூரில் வேலை தேடி வந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தனியாா் நிறுவன வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.புதூா் முதல் தெருவில் செயல்பட்டு வரும் தனியாா் வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு ஈரோட்டைச் சோ்ந்த 15 வயது சிறுமி ஒருவா் வேலை கேட்டு வந்துள்ளாா்.
அந்த நிறுவனத்தின் உரிமையாளா் ஹென்றி மாா்சல் (எ) சிவா, சிறுமியை கேரள மாநிலத்துக்கு வேலைக்கு அனுப்பியுள்ளாா். ஆனால், வேலைக்கு சென்ற சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தனியாா் வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு திரும்பியுள்ளாா்.
அப்போது, சிறுமிக்கு அந்நிறுவனத்தின் உரிமையாளா் ஹென்றி மாா்சல் (எ) சிவா, பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இது குறித்து சிறுமி பெற்றோரின் உதவியுடன் திருப்பூா் கேவிஆா் நகா் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இது குறித்து போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஹென்றி மாா்சல் (எ) சிவாவைக் கைது செய்தனா்.