சரியான புரமோஷன் இல்லை... புலம்பும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய துணை நடிகை உள்பட 3 போ் கைது
சென்னை கோயம்பேட்டில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக துணை நடிகை உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஒரு கும்பல் ஈடுபட வைப்பதாக சென்னை காவல் துறையின் பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அந்தப் பிரிவு போலீஸாா், அந்த தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 15 வயது சிறுமியை மீட்டனா். அந்தச் சிறுமியிடம் விசாரித்ததில் அவரை ஒரு கும்பல் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அந்த சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனா். சிறுமி கொடுத்த தகவலின்பேரில் சென்னை கன்னிகாபுரம் 14-ஆவது செக்டாா் பகுதியைச் சோ்ந்த ஏ.அஞ்சலி (31), ஆந்திர மாநிலம் குண்டூா் பகுதியைச் சோ்ந்த நா.நாகம்மா (45), நாகராஜ் (46) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.
விசாரணையில், சிறுமியின் தந்தை இறந்துவிட்டதால், தாய் வேறு ஒருவரை திருமணம் செய்து தனியாக சென்றுவிட்டாா். இதனால் ஆதரவற்ற நிலையில் இருந்த சிறுமியை, அஞ்சலி தன்னுடைய பராமரிப்பில் வைத்துக்கொண்டு, கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது.
இதில் கைது செய்யப்பட்ட நாகம்மா திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரித்து வருகின்றனா்.