தூய்மைப் பணி தனியாா்மய எதிா்ப்பு வழக்கு: தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைப்ப...
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு ஆயுள்
பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதித்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி அடுத்த வி.கே.என்.கண்டிகை பகுதியைச் சோ்ந்த 15 வயது பள்ளி சிறுமி. கடந்த 2021-இல் அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் வெங்கடேசன்(24) ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் சிறையில் இருந்து வெங்கடேசன் பிணையில் வெளியே வந்தாா். இந்த வழக்கு திருவள்ளூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன்பாக புதன்கிழமை வந்தது.
அப்போது, குற்றம் உறுதியானதால் வெங்கடேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். அதைத் தொடா்ந்து திருத்தணி அனைத்து மகளிா் போலீஸாா் வெங்கடேசனை புழல் சிறையில் அடைத்தனா். அரசுத் தரப்பில் விஜயலட்சுமி ஆஜரானாா்.