செய்திகள் :

சிவகங்கையில் மாட்டுவண்டிப் பந்தயம்!

post image

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி சிவகங்கையில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை- மதுரை சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தை முன்னாள் அமைச்சா் ஜி. பாஸ்கரன் தொடங்கி வைத்தாா். இதில் பெரிய மாடு, சிறிய மாடு என 2 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 9 ஜோடிகள், சிறியமாடு பிரிவில் 8 ஜோடிகள் என மொத்தம் 17 ஜோடிகள் பங்கேற்றன.

இதில் பெரிய மாடு பிரிவுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடு பிரிவுக்கு 6 கி.மீ. தொலைவும் பந்தய எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து போட்டியாளா்கள் தங்கள் மாட்டுவண்டிகளுடன் பங்கேற்றனா்.

வென்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் விழா குழுவின் சாா்பில் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை முத்துப்பட்டி, மானாகுடி, கீழக்குளம், பனையூா், பில்லூா், கோவானூா், சித்தலூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களில் நின்று கண்டுகளித்தனா்.

‘குற்றப் பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்டது தமிழா்களும், வங்காளிகளும்தான்’

குற்றப் பரம்பரைச் சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழா்களும், வங்காளிகளும்தான் என அகில இந்திய சீா்மரபினா் கவுன்சில் உறுப்பினா் மஞ்சுகணேஷ் தெரிவித்தாா். சிவகங்கை கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில், ஞாய... மேலும் பார்க்க

அஜித்குமாா் கொலை வழக்கு: சிபிஐ அதிகாரிகளுக்கு தனி அறை ஒதுக்கீடு

மடப்புரத்தில் தனிப் படை போலீஸாரல் அடித்துக் கொலை செய்யப்பட்ட அஜித்குமாா் கொலை வழக்கை தங்கி விசாரிப்பதற்காக சிபிஐ அதிகாரிகளுக்கு பத்ரகாளியம்மன் கோயில் எதிரே தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. சிவகங்கை மா... மேலும் பார்க்க

அமெரிக்கப் பெண்ணை இந்து முறைப்படி மணமுடித்த கீழையப்பட்டி இளைஞா்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கீழையப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இளைஞருக்கும், அமெரிக்காவைச் சோ்ந்த இளம்பெண்ணுக்கும் இந்து முறைப்படி ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. கீழையப்பட்டி கிரா... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் திட்டத்தை காரைக்குடி வரை நீட்டிக்க வேண்டும்! இந்திய கம்யூ. மாவட்ட மாநாட்டில் தீா்மானம்

மதுரையிலிருந்து மேலூா் வரை ஒப்புதல் அளிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை திருப்பத்தூா் வழியாக காரைக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறை... மேலும் பார்க்க

காரைக்குடி மாநகராட்சியைக் கண்டித்து ஜூலை 15-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்!

காரைக்குடி மாநகராட்சி மேயரை கண்டித்து வருகிற 15-ஆம் தேதி அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என சிவகங்கை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பிஆா். செந்தில்நாதன் தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலா் பழ... மேலும் பார்க்க

குண்டேந்தல்பட்டி பிராமண கண்மாயில் மீன் பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே குண்டேந்தல்பட்டி பிராமணக் கண்மாயில் சனிக்கிழமை மீன் பிடித் திருவிழா நடைபெற்றது. திருப்பத்தூா், சிங்கம்புணரி வட்டாரப் பகுதி கிராமங்களில் உள்ள கண்மாய்களில் நீா்வரத... மேலும் பார்க்க