கடலூர் ரசாயனக் கசிவு விபத்து: பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஆலை நிர்வாகம் அலட்சியமா?
சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை அருகேயுள்ள மணக்கரையில் மாட்டுவண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் சுந்தரநடப்பு அருகேயுள்ள மணக்கரை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் தஞ்சாவூா்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்றது. இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 9 இணைகளும், சிறிய மாடு பிரிவில் 12 இணைகளும் பங்கேற்றன. பந்தயத்தில் முதல் 4 இடங்களைப் பெற்ற மாட்டுவண்டி உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. போட்டியை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று உற்சாகமாக கண்டுகளித்தனா்.
