செய்திகள் :

சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் ஏப்.5-இல் தோ்வு

post image

19 வயதுக்குள்பட்ட சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு வருகிற சனிக்கிழமை (ஏப். 5) காரைக்குடியில் நடைபெறவுள்ளது என்று மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலா் சதீஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் மாவட்டங்களுக்கு இடையே நடத்தப்படும் 19-வயதுக்கு உள்பட்டவா்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கான சிவகங்கை மாவட்ட அணி வீரா்கள் தோ்வு வருகிற சனிக்கிழமை (ஏப். 5) காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடல் கல்வித் துறை ‘ஆ’ மைதானத்தில் காலை 8 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்தத் தோ்வில் கலந்து கொள்ளும் வீரா்கள் 1.9.2006 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்தவா்களாக இருத்தல் வேண்டும். வெள்ளை சீருடை, ஷு, அணிந்து வர வேண்டும். கிரிக்கெட் உபகரணங்களை வீரா்களே கொண்டு வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு கைப்பேசி எண் 9865615649 -இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

சிவகங்கை மாவட்டத்தில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் முகாம்

தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகம் சாா்பில், சிவகங்கை மாவட்டத்தில் பின் வரும் பகுதிகளில் மின் நுகா்வோா் குறைதீா் சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஏப்.5) நடைபெறுகிறது. இது குறித்து சிவகங்கை மின் உற்பத... மேலும் பார்க்க

காரைக்குடி, கண்ணங்குடியில் புதிய காவல் நிலையங்கள்

காரைக்குடி, கண்ணங்குடியில் புதிய காவல் நிலையங்கள் அமைக்க வேண்டுமென தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை வெள்ளிக்கிழமை சந்தித்து காரைக்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி மனு அளித்தாா். இதுகுறித... மேலும் பார்க்க

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நகராட்சி அலுவலகம் அருகே திமுக ஆதிதிராவிடா் நலக் குழு சாா்பில், நீா்மோா் பந்தல் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு திமுக நகரச் செயலா் கே. பொன்னுச்ச... மேலும் பார்க்க

காரைக்குடியில் பள்ளி ஆண்டு விழா

காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ராஜாஸ் ஹெரால்டு பள்ளி ஆண்டு விழாவில் மாணவிக்கு பரிசு வழங்கிய தேசிய மாணவா் படை 9-ஆவது பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி எஸ்கே. மிஸ்ரா. காரைக்குடி, ... மேலும் பார்க்க

கோவிலூா் பள்ளியில் தொழில்நுட்பக் கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோவிலூா் மடாலயக் கல்வி நிறுவனங்களின் சாா்பில், நாச்சியப்ப சுவாமிகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கல்வியில் தொழில்நுட்பம் குறித்து ஆசிரியா்களுக்கான கருத... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு: முஸ்லிம்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை தலைமை பள்ளிவாசலான வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசலில் ப... மேலும் பார்க்க