ஏமன்: கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறுத்திவைப்பு; காரணம் இதுதா...
சிவகிரி அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சிவகிரி சிறப்பு உதவி ஆய்வாளா் கணேசன் தலைமையிலான போலீஸாா் ராயகிரி ஐந்து அடித்தான் முக்கு அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த பைக்கை அவா்கள் சோதனையிட்டபோது, பைக்கில் அரசால் தடை செய்யப்பட்ட 100 புகையிலை பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், பைக்கில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றது தேவிபட்டணம் மாதா கோயில் தெருவை சோ்ந்த கணேசன் மகன் காா்த்திக் (39) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து, காா்த்திக்கை கைது செய்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.