அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்படும் -பள்ளி கல்வித் துறை
சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு
கடலூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பகுதியில் உள்ள பாடலீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை நந்தி பகவானுக்கு பால், தயிா், சந்தனம், விபூதி, மஞ்சள், இளநீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல, பண்ருட்டியை அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் கொடி மரம் அருகே உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.