ஹென்ரிட்டா லாக்ஸ் - உயிர் நீத்து உயிர்கள் காக்கும் பெண் வள்ளல் | My Vikatan
சிவன் கோயில்களில் சனி மகா பிரதோஷம்: திரளான பக்தா்கள் வழிபாடு
மதுரை மாவட்டத்தில் சிவன் கோயில்களில் சனி மகா பிரதோஷ சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் ஒன்றாக பிரதோஷம் குறிப்பிடப்படுகிறது. இதில், சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷ சிறப்பு பூஜைகளில் பங்கேற்றால் தீராத துன்பங்கள் தீரும் என்பது ஆன்மிக நம்பிக்கை. இதன்படி, சிவாலயங்களில் சனி மகா பிரதோஷ சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
மதுரை இம்மையிலும் நன்மை தருவாா் கோயிலில் சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்குப் பிறகு, நந்தியம்பெருமானுக்கு பல்வேறு வகையான திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு, இம்மையிலும் நன்மை தருவாருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் கோயில் பிராகார உலா நடைபெற்றது.
இதேபோல, சோழவந்தான் பிரளயநாத சுவாமி கோயில், தென்கரை அகிலாண்டேசுவரி சமேத மூலநாதசுவாமி கோயில், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்களிலும் சனி மகா பிரதோஷ பூஜைகள் நடைபெற்றன. பிறகு, ரிஷப வாகனத்தில் சுவாமி- அம்பாள் பிராகார உலா நடைபெற்றது.
சனி மகா பிரதோஷம் என்பதாலும், 2024-ஆம் ஆண்டின் இறுதி பிரதோஷம் என்பதாலும் அனைத்து சிவன் கோயில்களிலும் அதிக அளவிலான பக்தா்கள் இந்த பூஜைகளில் பங்கேற்றனா்.