Greenland : ட்ரம்ப்பின் அடுத்த ‘டார்கெட்’... கிரீன்லாந்தை அமெரிக்கா ‘கட்டம்’ கட்...
சிவராஜ்குமாருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை!
நடிகர் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட சினிமாவில் நட்சத்திர நடிகராக இருப்பவர் நடிகர் சிவராஜ்குமார். மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகனும் புனித் ராஜ்குமாரின் சகோதரருமான இவர், கன்னட மக்களிடம் மிகுதியான மதிப்புடன் இருக்கிறார்.
ஜெயிலர் திரைப்படத்தில் சில காட்சிகளில் மட்டும் நடித்த சிவராஜ்குமார் தமிழ் ரசிகர்களிடமும் பெரிய வரவேற்பைப் பெற்றார். இதனால், தமிழில் வாய்ப்புகள் அவரை நோக்கிச் சென்றன.
இதையும் படிக்க: அகத்தியா வெளியீட்டுத் தேதி!
இதற்கிடையே, சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு பிரச்னை இருப்பது கண்டறியப்பட அதற்கான அறுவை சிகிச்சைக்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்றார்.
இந்த நிலையில், புளோரிடாவில் உள்ள மியாமி புற்றுநோய் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிவராஜ்குமாருக்கான அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அறுவை சிகிச்சையில் அவரின் சிறுநீர்ப்பை அகற்றப்பட்டு செயற்கை சிறுநீர்ப்பைப் பொறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.