செய்திகள் :

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு!முதல்வரிடம் பாஜக வேண்டுகோள்!

post image

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவளிக்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக சார்பாக வேண்டுகோள்! நமது பாரதத்தின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தமிழ் மண்ணின் மைந்தரும், மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இண்டி கூட்டணியிலும் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு அளிக்க வேண்டும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

தென் பாரதத்தில் இருந்து ஒரு பெருமைமிகு தமிழரை, மூத்த தலைவரை, துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளாராக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது தமிழகத்திற்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரம் ஆகும்.

இத்தருணத்தில் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வை நினைவுபடுத்த விரும்புகிறேன். 2022-இல் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக அறிவித்தபோது, ஒடிசா மண்ணின் மகளான அவரை முன்னாள் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கட்சி வித்தியாசங்களையும், அரசியல் மாறுபாடுகளைத் தாண்டி தனது கட்சியினரை வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பட்நாயக் அவர்களுக்கு அன்றிருந்த பெருந்தன்மையும், மாநிலப் பற்றும் திமுகவுக்கும், அதன் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினுக்கும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

ஆகவே, நமது தமிழ் மண்ணின் மைந்தரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தனது முழு ஆதரவையும் நல்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க:இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா?

ஓபிஎஸ்ஸை சந்தித்தது உண்மைதான்; அதிமுக பலவீனமாக இருக்கிறது: சசிகலா

அதிமுக பலவீனமாகத்தான் இருக்கிறது என்றும் அதனைச் சரிசெய்யவே தான் இருப்பதாகவும் வி.கே. சசிகலா கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "அதிமுக இப்போது வரை பலவீனமாகவே உள்ளது. அதை மாற்றுவதுத... மேலும் பார்க்க

வேளாங்கண்ணிக்கு 3 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவையொட்டி தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எர்ணாகுளம் சந்திப்பு - வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில் (06061) ஆகஸ்ட் 27, செப்டம்பர் ... மேலும் பார்க்க

தவெக கொடிக்கு தடையில்லை - உயர்நீதிமன்றம்!

தவெக கொடியை பயன்படுத்தத் தடைகோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் கொடியைப்போல தவெகவின் கொடி இருப்பதாகக் கூறி, தவெகவின் கொடி மீது தடைவிதிக்கக் க... மேலும் பார்க்க

2 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று (17-08-2025) காலை மத்தியமேற்கு மற்றும் அதனை ஓட்டிய ... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா?

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக திருச்சி சிவாவை நிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 21-இல் தனது பதவியை ராஜி... மேலும் பார்க்க

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி வழியாக திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கும் என்பதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்க... மேலும் பார்க்க