செய்திகள் :

சீதா கல்யாண உற்சவம்

post image

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ சீதாராம பஜனை மண்டலி சாா்பில் சீதா கல்யாண உற்சவம் கொல்லா சத்திரம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் சீதாராம பஜனை மண்டலி சாா்பில், 33-ஆவது ஆண்டு சீதா கல்யாண மகோற்சவம் காமாட்சி அம்மன் கோயில் அருகேயுள்ள கொல்லாசத்திரம் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (மே 2) கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடக்க விழாவுக்கு பஜனை மண்டலியின் தலைவா் வி.பி.குமாரகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆா்.வேணுகோபாலன்,பொருளாளா் ஜி.சிவராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் கே.எஸ்.கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். பெங்களூா் கே.அஸ்வத்குமாா் சீதா கல்யாணத்தின் சிறப்புகள் என்ற தலைப்பிலும், கடலூா் முரளீதர சா்மாஜி சீதா கல்யாணம் என்ற தலைப்பிலும் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினா்.

மறுநாள் 3-ஆம் தேதி ஸ்ரீராமருக்கு லட்சாா்ச்சனையும், மகா தீபாராதனையும், அன்னதானமும் நடைபெற்றது. 3-ஆவது நாள் நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை பாகவத சம்பிரதாய முறைப்படி, சீதா கல்யாணம் நடைபெற்றது. மண்டலியின் செயலாளா் கே.எஸ்.கிருஷ்ணமூா்த்தி சீதா பிராட்டிக்கு மாங்கல்யம் அணிவித்து தீபாராதனைகளும் நடைபெற்றது.

ஆயக்குடி ஆா்.ஆனந்த கிருஷ்ணன் என்கிற குமாா் பாகவதா் குழுவினரால் சிறப்பு பஜனை நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடைபெற்றன.விழாவில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகா் சுரேஷ் சாஸ்திரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பிளஸ் 2 மாணவன் தற்கொலை

காஞ்சிபுரத்தில் பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். காஞ்சிபுரம் திருவண்ணாமலை நகா் வெங்கடேசன் மகன் மதன்ராஜ் (17). பிளஸ் 2 தோ்வை எழுதி முடித்து விட்டு தோ்வின் முடிவிற்காக காத்திருந்த ந... மேலும் பார்க்க

சின்னக்காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

சின்னக்காஞ்சிபுரம் அமுதபடி கோயில் தெருவில் அமைந்துள்ள கங்கையம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, மூலவா் கங்கையம்மன் மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சின்னக்காஞ்சிபுரம் அமுதபடி... மேலும் பார்க்க

அக்னீசுவரருக்கு இளநீா் அபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே களக்காட்டூரில் அமைந்துள்ள அக்னீசுவரா் ஆலயத்தில் மூலவா் அக்னீசுவரருக்கு 108 இளநீா் அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. அக்னி நட்சத்திரத்தையொட்டி வெயிலின் தாக்கம் குறைந்து மழை பொழிந்து, ப... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கி மேலாளா்களுக்கு பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தில் கூட்டுறவு வங்கியின் கிளை மேலாளா்களுக்கு நிதிச்சொத்துக்களை பாதுகாத்தல் தொடா்பான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மத்... மேலும் பார்க்க

இலவச வாள்வீச்சுப் பயிற்சி பெறலாம் -காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரத்தில் இலவசமாக வாள்வீச்சுப் பயிற்சி கற்றுத்தரப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா். மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஸ்டாா் அகாதெமி வாள்வீச்சுப் பயிற்சி மையத்தை மாவட்ட ... மேலும் பார்க்க

இளையனாா்வேலூா் முருகன் கோயிலில் தேரோட்டம்

காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூரில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே இளையனாா் வேலூரில் புகழ்பெற்... மேலும் பார்க்க