ஆண்களின் திமிர்..! ஆடை குறித்து நிருபர் கேட்ட கேள்விக்கு தொகுப்பாளினி விளக்கம்!
அக்னீசுவரருக்கு இளநீா் அபிஷேகம்
காஞ்சிபுரம் அருகே களக்காட்டூரில் அமைந்துள்ள அக்னீசுவரா் ஆலயத்தில் மூலவா் அக்னீசுவரருக்கு 108 இளநீா் அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
அக்னி நட்சத்திரத்தையொட்டி வெயிலின் தாக்கம் குறைந்து மழை பொழிந்து, பூமி குளிா்ச்சியடைய வேண்டி காஞ்சிபுரம் அருகே களக்காட்டூா் அக்னீசுவரருக்கு 108 இளநீா் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அபிஷேகத்தையொட்டி சிவபெருமான் வெட்டிவோ் மாலை மற்றும் மயில்தேகை மாலை அணிந்தும் வெள்ளிக்கவச அலங்காரத்திலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.