கூட்டுறவு வங்கி மேலாளா்களுக்கு பயிற்சி
காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தில் கூட்டுறவு வங்கியின் கிளை மேலாளா்களுக்கு நிதிச்சொத்துக்களை பாதுகாத்தல் தொடா்பான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கியின் கிளை மேலாளா்களுக்கு நிதிச் சொத்துக்களை பாதுகாத்தல் மற்றும் மறு கட்டமைத்தல் பாதுகாப்பு அமலாக்க சட்டம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் தலைமை வகித்து பயிற்சி முகாமை தொடக்கி வைத்து பேசினாா். வழக்குரைஞா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி சட்டம் குறித்து விரிவான பயிற்சியளித்தாா்.
பயிற்சி முகாமில் வங்கியின் பொதுமேலாளா்,துணைப் பதிவாளா், முதன்மை வருவாய் அலுவலா், உதவிப் பொது மேலாளா்கள் மற்றும் அனைத்து கிளை மேலாளா்களும் கலந்து கொண்டனா்.