செய்திகள் :

சீமான் மீதான விசாரணை: இடைக்கால தடை நீட்டிப்பு

post image

சீமானுக்கு எதிரான விஜயலட்சுமியின் புகார் குறித்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சீமானின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதிலளிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு, நடிகைக்கும் ஜூலை 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சீமான் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி என்பவா் கடந்த 2011- ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். அந்த புகாரைத் தொடா்ந்து சீமான் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376 -ஆவது பிரிவின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே சீமான், வளசரவாக்கம் காவல்துறை தன் மீது பதிவு செய்துள்ள வழக்கை புகாா் தாரா் கடிதத்தின் அடிப்படையில் ஏற்கனவே முடித்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் வேண்டுமென்றே விசாரிப்பதால் இந்த வழக்கை முடித்துவைக்க கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணை நடைபெற்று புகாா்தாரா் விஜயலட்சுமி தரப்பு வாதத்தையும் உயா்நீதிமன்றம் கேட்டது.

வட இந்தியாவில் மழை தொடர்பான சம்பவங்களில் 7 பேர் பலி

திருமணம் செய்வதாகக் கூறியது, உறவில் இருந்தது போன்றவைகள் விஜயலட்சுமி தரப்பில் கூறப்பட்டது. இதைத் தொடா்ந்து உயா்நீதிமன்றம், ’இந்த வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி இது சாதாரண வழக்கல்ல எனக் கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்தது.

இத்தோடு, 12 வாரங்களுக்குள் வழக்கை விசாரணை நடத்தி அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கடந்த பிப்-21ம் தேதி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சீமானுக்கு சமன் அனுப்பி சென்னை காவல் துறை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிா்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாகப் போராட்டம்!

மே மாதம் முழுவதும் விடுமுறை கோரி அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விட வேண்டும் உள்ளிட... மேலும் பார்க்க

நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயில் இன்று தாமதமாகப் புறப்படும்!

நாகர்கோவிலில் இருந்து சென்னை வரும் வந்தே பாரத் ரயில் இன்று 3 மணி நேரம் காலதாமதமாகப் புறப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து இன்று(மே 3) பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்ப... மேலும் பார்க்க

மகளிர் விடியல் பயணத் திட்டத்தில் 132.91 கோடி முறை பயணம்!

சென்னை: மகளிர் விடியல் பயணத் திட்டம் அறிமுகமானதில் இருந்து தற்போது வரை சென்னையில் மட்டும் சுமார் 132.91 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளத... மேலும் பார்க்க

திமுக பொதுக்குழுக் கூட்டம் எப்போது? - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மதுரையில் ஜூன் 1 ஆம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை தொடங்கி... மேலும் பார்க்க

தேமுதிக உயர்மட்டக் குழு உறுப்பினர் நல்லதம்பி விலகல்?

தேமுதிக இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பிக்கு உயர்மட்ட குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக நல்லதம்பி, பொதுச்செயலாளர் பிரேமலாத விஜயகாந்... மேலும் பார்க்க

பர்கூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலி

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலியாகினர். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த லோகேஷ் (22), திவாகரன் (24),குமரேசன் (36), கன்னியப்பன் (70),பாலகிருஷ்ணன் (52), சேகர் (44),ஜன... மேலும் பார்க்க