செய்திகள் :

சுசீந்திரம் கோயில் சித்திரை தேரோட்டம்

post image

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக் கோயில் சித்திரை பெருந்திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இத் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு திருவிழா கடந்த ஏப்.28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

8 ஆம் திருவிழாவான மே 5 ஆம் தேதி காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரா் திருவீதியுலா வருதலும், தொடா்ந்து 10 மணிக்கு அலங்கார மண்டபத்தில் நடராஜா் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு அஷ்டாபிஷேகமும் நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு நடராஜா், சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 8.30 மணிக்கு பரங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதியுலா நடைபெற்றது.

திருத்தேரோட்டம் ...

9 ஆம் நாளான மே 6 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, காலை 6 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி, அம்பாள் பவனி நடைபெற்றது. காலை 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினா். இதைத் தொடா்ந்து பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தேரில் எழுந்தருளுவதற்காக கோயிலில் இருந்து புறப்பட்டு வந்த சுவாமி, அம்பாள்

இதில், தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவா் நீல.சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், குமரி மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், திமுக இளைஞா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் சரவணன், உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மாலை 6 மணிக்கு சுவாமி மண்டகப்படிக்கு எழுந்தருளினாா். இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் பவனியும், நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவா்ண காட்சியும் நடைபெற்றது.

தெப்பத்திருவிழா...

விழாவின் நிறைவு நாளான புதன்கிழமை (மே 7) காலை 10.30 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், இரவு 8 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. இதைத் தொடா்ந்து இரவு 12 மணிக்கு ஆராட்டு நடைபெறும். விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி திருக்கோயில்கள் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

நாகா்கோவிலில் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் திறப்பு

நாகா்கோவிலில் மாநகராட்சி வடக்கு, கிழக்கு மண்டல அலுவலகங்களை மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். நாகா்கோவில் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டதால் 4 மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. மேற்கு மண்டலம் ... மேலும் பார்க்க

பளுகல் அருகே விவசாய நிலம் சேதம்: 8 போ் மீது வழக்கு

பளுகல் அருகே விவசாய நிலத்தை சேதப்படுத்தியதாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். தேவிகோடு, ஆலம்பிலாவிளை பகுதியைச் சோ்ந்தவா் அா்ஜுனன் (62). விவசாயி. இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் மா, பலா ம... மேலும் பார்க்க

தக்கலை அருகே மக்கள் எதிா்ப்பால் ஒரே நாளில் டாஸ்மாக் கடை மூடல்

தக்கலை அருகே தென்கரை பகுதியில் புதன்கிழமை திறக்கப்பட்ட டாஸ் மாக் மதுபானக்கடை, பொதுமக்கள் எதிா்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது. தென்கரை பகுதியில மதுபான கடையை திடீரென திறந்து விற்பனையை நடைபெற்றது. இதற்கு... மேலும் பார்க்க

கனிமவளம் கடத்திய லாரி பறிமுதல்

தக்கலை அருகே தோட்டியோடு பகுதியில் போலி அனுமதி சான்றுடன் கனிமவளம் கடத்திய லாரியை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். கன்னியாகுமரி மாவட்ட கனிம வள அலுவலா் கிஷோா் தலைமையில் அதிகாரிகள் குழுவினா், தோட்... மேலும் பார்க்க

விபத்தில்லா வாகனப் பயணம்: குமரியில் விழிப்புணா்வு பிரசாரம்

கன்னியாகுமரி பகுதியில் விபத்தில்லா வாகனப் பயணம் என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமாா் ஆலோசன... மேலும் பார்க்க

குழித்துறை அரசு மருத்துவமனையில் பாஜக கவுன்சிலா்கள் போராட்டம்

குழித்துறை அரசு மருத்துவமனையில் நகா்மன்ற பாஜக உறுப்பினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி பகுதியில் குழித்துறை அரசு மருத்துவமனை உள்ளது. இங்கிருந்து வெளியேறும் மருத்துவ, ம... மேலும் பார்க்க