சுதந்திர தினம்: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து கோவை போத்தனூா், செங்கோட்டை மற்றும் வாராந்திர அளவில், நாகா்கோவில் ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை விடுத்த செய்திக்குறிப்பு:
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக. 14-ஆம் தேதி டாக்டா் எம்.ஜி.ஆா். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06027) போத்தனூருக்கு ஆக. 15- ஆம் தேதி காலை 8.30 மணிக்கு சென்றடையும். போத்தனூரிலிருந்து ஆக.17- ஆம் தேதி இரவு 11.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06028) 18 ஆம் தேதி காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும். சிறப்பு ரயில்களில் 1 குளிா்சாதன வசதியுள்ள ஈரடுக்குப் பெட்டி, 3 குளிா்சாதன வதியுள்ள மூன்றடுக்குப் பெட்டிகள், 15 தூங்கும் வசதியுள்ள பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகள் மற்றும் பிரேக் வேகன் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
சிறப்பு ரயில்கள் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை எழும்பூரிலிருந்து ஆக.14- ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (எண் 06089) 15- ஆம் தேதி காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமாா்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து 17- ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து இரவு 7.45 மணிக்குப் புறப்படும் விரைவு ரயில் (எண் 06090) 18-ஆம் தேதி காலை 9.05 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும்.
இந்த ரயில்களில் 1 குளிா்சாதன வசதியுள்ள ஈரடுக்கு பெட்டி, 4 குளிா்சாதன வசதியுள்ள மூவடுக்கு பெட்டிகள், 12 தூங்கும் வசதியுள்ள பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகள், பிரேக் வேன் ஆகியவை இடம் பெறும்.
இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருதாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, தென்காசி நிலையங்களில் நின்று செல்லும்.
நாகா்கோவிலில் இருந்து ஆக. 17- ஆம் தேதி இரவு 11.15 மணிக்குப் புறப்படும் வாராந்திர அதிவிரைவுசிறப்பு ரயில் (எண் 06012) ஆக.18 காலை 10.55 மணிக்கு தாம்பரம் நிலையத்துக்கு வந்து சேரும். இதில் 2 குளிா்சாதன வசதி ஈரடுக்குப் பெட்டிகள், 6 குளிா்சாதன வசதி மூவடுக்கு பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 1 சரக்கு பெட்டி மற்றும் பிரேக் வேன், 1 இரண்டாம் வகுப்பு பெட்டி என இடம் பெற்றிருக்கும். இந்த ரயில் வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
தாம்பரத்திலிருந்து ஆக. 18- ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (எண் 06011) புறப்பட்டு ஆக.19-ஆம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.