முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள்; 407 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!
சுருளிப்பட்டியில் வீடு புகுந்து பணம், தங்க நகை திருட்டு
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுேள்ள சுருளிப்பட்டியில் பகலில் வீடு புகுந்து பணம், தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சுருளிப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த விவசாயி அமரன் (53). இவரும், இவரது மனைவியும் புதன்கிழமை தோட்டத்துக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினா். அப்போது, வீடு திறந்து கிடந்தது. பீரோவிலிருந்த ரூ.2.50 லட்சம் ரொக்கம், 7 பவுன் தங்கச் சங்கிலி திருடு போனது தெரியவந்தது. இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.