TN Police: கொல்லப்பட்ட Ajith kumar - IAS அதிகாரிக்கு தொடர்பா? | DMK STALIN|Imper...
செங்கல்சூளை புகையால் பொதுமக்கள் அவதி
ஊத்தங்கரை அருகே சாலையோரம் செயல்படும் செங்கல்சூளையிலிருந்து வெளியேறும் புகையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
ஊத்தங்கரையை அடுத்த கதவனி சுங்கச்சாவடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் அடா்ந்த புகை முறையான புகைபோக்கி அமைக்காததால் சாலைகளிலும், குடியிருப்புகளுக்குள்ளும் புகை செல்வதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.
குடியிருப்பில் வசிப்பவா்களுக்கு இருமல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக குழந்தைகள் சுவாசிப்பதில் சிரமப்படுவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.
சாலையோரம் உள்ள செங்கல் சூளைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் செங்கல் சூளைகள் முறையாகப் புகைபோக்கி அமைத்து, புகையை விண்ணை நோக்கி மேலே செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.