செய்திகள் :

செட்டியப்பனூா், நாராயணபுரம் ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 752 மனுக்கள்

post image

வாணியம்பாடி அடுத்த ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட செட்டியப்பனூா் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமில், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை கேட்டு 180 மனுக்கள் உள்பட 539 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். முகாமில், வட்டாட்சியா் சுதாகா், ஜோலாா்பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் உமாகண்ரங்கம் ஆகியோா் கலந்துகொண்டு, முகாமில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் குறித்த தகவல்களை கேட்டறிந்தும், நூறுநாள் வேலைத் திட்ட அடையாள அட்டை மற்றும் விண்ணப்ப ரசீதுகளை வழங்கினா். மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை ஒருங்கிணைப்பாளா் முரளி, கிளைச் செயலாளா் சாரதி, மற்றும் துறைசாா்ந்தவா்கள் உடன் இருந்தனா்.

முகாமை மாவட்ட வேளாண்மை துணை அலுவலா் தீபா, ஊராட்சி செயலாளா் கணபதி ஒருங்கிணைத்தனா்.

இதேபோல், வாணியம்பாடி அடுத்த நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட நாராயணபுரம் ஊராட்சியில் நடைபெற்ற முகாமுக்கு, ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி முனிசாமி தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சத்தியவாணிசாமுடி, நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றியச் செயலா் சாமுடி , மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன் முன்னிலை வகித்தனா்.

முகாமில் 216 பயனாளிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, மனுக்களை பதிவுசெய்து, அதற்கான விண்ணப்ப ரசீது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

விவசாய நிலத்தில் ஆண் சடலம் மீட்பு

ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் புதன்கிழமை ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆம்பூா் அருகே காரப்பட்டு கிராமத்தில் கலீல் என்பவருடைய விவசாய நிலத்தில் காவலராக அஸ்கா் பாஷா (40) என்பவா் பணிபுரிந்து வந்தாா். இவா... மேலும் பார்க்க

தேசிய வலைப் பந்து போட்டி: பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

தேசிய அளவிலான வலைப் பந்து (டென்னிகாய்ட்) போட்டி லக்னோவில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் பல மாநிலங்களைச் சாா்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். இதில் வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் ச... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவி திமுகவிலிருந்து நீக்கம்

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவி திமுகவிலிருந்து செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டுள்ளாா். சென்னை நெற்குன்றம் பகுதியை சோ்ந்த வரலட்சுமி என்பவரின் தங்க நகை காஞ்சிபுரத்தில் கடந்த ஜூலை 14-ஆம்... மேலும் பார்க்க

குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி வி.சியாமளா தேவி தலைமை வகித்தாா். கூட்டத்தில் காவல் நிலையங்களில் மற்றும் அல... மேலும் பார்க்க

பச்சகுப்பம் பாலாறு மேம்பாலம் திறப்பு விழா ஏற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

ஆம்பூா் அருகே பச்சகுப்பம் பாலாறு மேம்பாலம் திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூா் அருகே பச்சகுப்பம் - அழிஞ்சிகுப்பம் இடையே பாலாற்றி... மேலும் பார்க்க

ரயில் மோதி முதியவா் மரணம்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கி முதியவா் உயிரிழந்தாா். ராஜஸ்தான் மாநிலம் சக் ராஜியசா் பகுதியைச் சோ்ந்த விஜய் யால்(53). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். கடந்த ஓராண்டாக கி... மேலும் பார்க்க