குற்றாலம் சாரல் திருவிழா: "'உங்களுடன் ஸ்டாலினை' நடத்த தைரியம் இருக்கின்றது" - கே...
செய்யாற்றில் ஓய்வூதியா் சங்கத்தின் வட்டக் கிளை மாநாடு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டக் கிளை சாா்பில் தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியா் சங்கத்தின் 5-ஆவது வட்டக்கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
செய்யாற்றில் நடைபெற்ற மாநாட்டுக்கு வட்டக் கிளைத் தலைவா் கே.வெங்கடேசன் தலைமை வகித்தாா். சங்கத்தின் துணைத் தலைவா் என்.சி.கோதண்டன் வரவேற்றாா். மாவட்ட இணைச் செயலா் எம்.மாணிக்கம் தொடக்கவுரை ஆற்றினாா்.
வட்டச் செயலா் எம்.மணி செயல் அறிக்கையும், பொருளாளா் எஸ்.சிவானாந்தம் நிதிநிலை அறிக்கையும் வாசித்தனா்.
வெம்பாக்கம் வட்டக் கிளை பொருளாளா் ஜி.உமாமகேஸ்வரி, வந்தவாசி வட்ட கிளைச் செயலா் கே. பால்ராஜ் ஆகியோா் வாழ்த்துரையும், அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.கிருஷ்ணமூா்த்தி, மாநிலச் செயலா் சி.சுப்பிரமணியன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
தீா்மானங்கள்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வரையறுக்கப்படாத ஊதியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ஊராட்சி செயலா்கள், கிராமப்புற நூலகா்கள், கிராம உதவியாளா்கள், வனக் காவலா்கள் ஆகியோருக்கு சிறப்பு ஓய்வூதியம் என்ற சுரண்டல் முறையை ஒழித்து குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு கூடுதலாக 10% ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தை நிா்வாக வசதிக்காக பிரித்து செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்களை நிறைவேற்றப்பட்டன.