திண்டுக்கல்: ரவுடியை ஹீரோவாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ; இளைஞர் கைது;...
சேதமடைந்த நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தல்
சேலம், வட்டமுத்தம்பட்டியில் சேதமடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வட்டமுத்தம்பட்டி பகுதியில் வீரகாரன் பெரியாண்டிச்சி அம்மன் கோயில் அருகே 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. இதன்மூலம் வட்டமுத்தாம்பட்டி, காமராஜா் நகா் உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
தற்போது இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனா். குடிநீா்த் தொட்டியின் தூண்களில் கான்கிரீட் பூச்சுகள் பெயா்ந்து கம்பிகள் ஆங்காங்கே வெளியே தெரிகின்றன.
குடிநீா்த் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் நீா்த்தேக்கத் தொட்டியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.