``1,400 ஏக்கர் விவசாயம் பாதிக்கும்'' - புறவழிச்சாலை அமைக்க கோவை, திருப்பூர் விவச...
சேது, கோவை, ஓகா, திருப்பதி விரைவு ரயில்கள் செப். 21 முதல் மின்சார என்ஜினில் இயங்க ஏற்பாடு
ராமேசுவரத்திலிருந்து மானாமதுரை வழியாக இயக்கப்படும் சேது, கோவை, திருப்பதி, ஓகா ஆகிய விரைவு ரயில்கள் வருகிற 21- ஆம் தேதி முதல் மின்சார என்ஜின்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ராமேசுவரத்திலிருந்து மானாமதுரை வழியாக தினமும் சென்னை எழும்பூருக்கு சேது விரைவு ரயில், திருப்பதி, கோவை, ஓகாவுக்கு வாராந்திர விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது இந்த ரயில்கள் டீசல் என்ஜின்கள் பொருத்தப்பட்டு இயங்குகின்றன. இந்த நிலையில், வருகிற 21- ஆம் தேதி முதல் டீசல் என்ஜின்களுக்குப் பதிலாக மின்சார என்ஜின்கள் பொருத்தப்பட்டு இந்த ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்திருப்பதாக மானாமதுரை ரயில்வே வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.