தந்தை, சித்தியை தலைதுண்டித்து கொன்ற மகன்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்; சேலத்...
சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கூட்டரங்கம் திறப்பு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் சேப்பாக்கம் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூட்டரங்கம் வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள கேஎம்கே ஸ்டாண்டில் புதிதாக ஸ்ரீராமன் அரங்கம் நவீன வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிரி்ககெட் சங்கத் தலைவா் பி. அசோக் சிகாமணி புதிய அரங்கை திறந்து வைத்தாா். முன்னாள் தலைவா் ரூபா குருநாத், சென்னை சூப்பா் கிங்ஸ் சிஇஓ கே.எஸ். விஸ்வநாதன் முன்னிலை வகித்தனா்.
மேலும் சிறப்பிடம் பெற்ற தமிழகத்தைச் சோ்ந்த தேசிய தோ்வுக் குழு உறுப்பினா் எஸ். சரத், ஐசிசி முன்னாள் நடுவா் எஸ்.ரவி, வளரும் ஐசிசி நடுவா் மதனகோபால், ஐசிசி பேனல் நடுவா் என்.ஜனனி ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.
சங்கச் செயலா் ஆா்.ஐ.பழனி, துணைச் செயலா் ஆா்.என். பாபா ஆகியோா் பங்கேற்றனா்.